மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

சத்யராஜ் பட இயக்குனரின் 'சந்தித்ததும் சிந்தித்ததும்'

பாலு ஆனந்த் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதுடன் சத்யராஜ் நடித்த ‘அண்ணா நகர் முதல்தெரு’ உட்பட பதினைந்து படங்களை இயக்கியும் இருப்பவர்.

News image
Updated On :4 ஜனவரி 2024, 12:15 am IST

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலு ஆனந்த், மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

தற்போது அவர் 'சந்தித்ததும் சிந்தித்ததும்' எனும் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் சத்யா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக உதாஷா நடிக்கிறார். மற்றும கஞ்சா கருப்பு, நிழல்கள் ரவி, ரஷியா ரித்விகா, சபிதா ஆனந்த், காதல் சரவணன், கிங்காங், டென்சிங், சோப்ராஜ், எல்.ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலு ஆனந்தும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சபேஷ் முரளி இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை சினேகன் எழுதுகிறார். சிபி சாம் சினி ஆர்ட்ஸ் என்ற  பட நிறுவனம் சார்பாக சிபி சக்கரவர்த்தி தயாரிக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் பாலு ஆனந்த் கூறியதாவது: “பெங்களூரில் போலீஸ் ரெகார்ட் மற்றும் பத்திரிக்கைகளில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட ஒருவன் தமிழ்நாட்டில் உயிருடன் வாழ்கிறான் அவன் எப்படி இறந்தான், எப்படி வாழ்கிறான் என்பது தான் கதை. அப்படி தமிழ் நாட்டில் வாழும் ஒருவனது காதல் கதையை காமெடியாக உருவாக்கி இருக்கிறோம். கதையை கேட்கும்போது ஆக்‌ஷன் படம் மாதிரி தெரிந்தாலும் இது முழுக்க முழுக்க ரொமான்டிக் காமெடி படம்” என்றார்.

பாலு ஆனந்த் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதுடன் சத்யராஜ் நடித்த ‘அண்ணா நகர் முதல்தெரு’ உட்பட பதினைந்து படங்களை இயக்கியும் இருப்பவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.