இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்; விமானியாகப் போகிறேன்: குக்கூ மாளவிகா
சமீபத்தில் பத்திரிகையாளர் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த குக்கூ திரைப்படம் இரண்டு பார்வை இல்லாதவர்களின் காதலை அழாக சொல்லும் படம். இது ரசிகர்ளிடம் நல்லவரவேற்பை


சமீபத்தில் பத்திரிகையாளர் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த குக்கூ திரைப்படம் இரண்டு பார்வை இல்லாதவர்களின் காதலை சொல்லும் படம். இது ரசிகர்ளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் கேரளத்தைச் சேர்ந்த புதுமுகம் மாளவிகா பார்வையற்ற பெண்ணாக அட்டகத்தி தினேசுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாளவிகா இனி தான் சினிமாவில் நடிக்கும் உத்தேசம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் நான் பைலட் ஆகவேண்டும் என்று தான் விரும்புகிறேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்று என்றுமே நான் நினைத்தது கிடையாது. ஒரு பொழுதுபோக்கிற்காக ராஜூமுருகன் அவர்களின் படத்தில் சவாலான கதாபத்திரத்தில் நடித்தேன். இனி சினிமாவில் நடிக்க விரும்பவில்லை.
ஜெர்மனியில் பயணிகள் விமான பயிற்சி கல்விக்கு விண்ணப்பித்துள்ளேன். . கிடைத்தவுடன் சென்றுவிடுவேன். என்றார். அதேநேரத்தில் போய்விடுவேன். இடையில தனக்கு கிடைக்கும் இடைவெளியில் குக்கூ மாதிரி சவாலான காதாபத்திரம் கிடைத்தால் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...