ரஜினி நடிப்பில் ரஞ்சித்தின் அடுத்தப் பட கதாநாயகி குறித்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஜினியுடன் ஜோடியாக நடிப்பது என் அதிர்ஷ்டம் என பிரபல நடிகை ராதிகா ஆப்தே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ரஜினியின் ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க உள்ளார் என சில நாள்களுக்கு முன்பு செய்திகள் வெளிவந்தன. ஆனால் இத்தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் இப்போது ஓர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இதைப் பற்றி பேசியுள்ளார் ராதிகா ஆப்தே. அதில் அவர் கூறியதாவது:
இந்த இன்பதிர்ச்சியில் இருந்து வெளியே வர கொஞ்ச நாள் ஆகும். ரஜினியை விடவும் வேறு யாரும் பெரிதல்ல. இயக்குநர் ரஞ்சித்தும் மிகவும் திறமையானவர். இது நிஜமானதில் நான் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளேன். ரஜினியைச் சந்திப்பதிலும் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
இதுபோன்ற படங்களுக்குப் பலத்த போட்டி இருக்கும். எனவே ரஜினியுடன் ஜோடியாக நடிப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.
கதை மிகவும் வித்தியாசமானது. என்னுடைய கதாபாத்திரமும் பலமாக இருக்கும். சும்மா நடனமாடிவிட்டுச் செல்வதை விடவும் நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம். அப்படி இருந்திருந்தாலும் இந்தப் படத்தில் நடித்திருப்பேன். ரஜினியுடன் ஒரு படத்தில் நடிப்பதே அபாரமானது. என்னுடைய கதாபாத்திரமும் நல்ல இயக்குநரும் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியாக அமைந்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


