சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் வெளியேற விரும்புவதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தகவல்

40% Of Indian Americans Consider Leaving The US

அமெரிக்காவைவிட்டு வெளியேற இந்தியர்கள் விருப்பம் - பிரதிப் படம்

Published On :24 ஏப்ரல் 2026, 8:35 am IST

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் வெளியேற விரும்புவதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் வேலை தேடியோ குடியுரிமை பெற வேண்டும் என்றெல்லாம் போராடிய காலங்கள் உண்டு. ஆனால், தற்போது அமெரிக்காவிலிருந்து வெளியேறவே பலரும் முயல்வதாகவும் விரும்புவதாகவும் கார்னகி என்டோவ்மென்ட் என்ற சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் 54 லட்சம் இந்தியர்கள் (அமெரிக்காவின் மக்கள்தொகையில் 1.6 சதவிகிதம்) வசித்து வரும்நிலையில், அவர்களில் 40 சதவிகிதத்தினர் அமெரிக்காவைவிட்டு வெளியேற விரும்புவதாகக் கூறியுள்ளனர்.

அவர்களிலும் 14 சதவிகிதத்தினர் அமெரிக்காவைவிட்டு உடனடியாக வெளியேற விரும்புவதாகவும், 26 சதவிகிதத்தினருக்கு அமெரிக்காவைவிட்டு வெளியேறும் எண்ணம் அவ்வப்போது வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவைவிட்டு வெளியேறுவதற்கான காரணங்களாக, அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழல், டிரம்ப்பின் இரண்டாது பதவிக்காலத்தில் அவரின் சரியில்லாத செயல்பாடுகள்தான் காரணம் என 71 சதவிகிதத்தினர் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி, விலை உயர்வு, வீட்டு வாடகை, குழந்தை வளர்ப்பு போன்ற காரணங்களை மேற்கோள் காட்டி நிதி நெருக்கடி ஏற்படுவதாக 54 சதவிகிதத்தினரும், பாதுகாப்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக 41 சதவிகிதத்தினரும் கூறுகின்றனர்.

இதனிடையே, அமெரிக்காவில் இந்தியர்கள் குடியேறுவதை டிரம்ப் விரும்பாத நிலையில், இந்தியர்களும் சீனர்களும் நரகத்தின் குழிகள் என்று சமீபத்தில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தியர்கள், அமெரிக்காவில் குழந்தையைப் பெற்றெடுத்து, பிறப்புரிமைக் குடியுரிமை பெற்று விடுவதாகவும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்துக் கொள்வதாகவும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

Summary

40% Of Indian Americans Consider Leaving The US, Survey Reveals Top Reasons

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.