தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

‘ஆர்யாவை நடிகைகளுக்குப் பிடிக்க காரணம் என்ன?’

ஆர்யாவை ஏன் எல்லாப் பெண்களும் கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் தெரியுமா?...

News image
Updated On :4 ஆகஸ்ட் 2015, 7:05 am

ஆர்யாவை கதாநாயகிகளுக்குப் பிடிக்க காரணம் என்ன என்பதை யட்சன் பட இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் கவிஞர் பா. விஜய் கூறினார்.

ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடித்து விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள படம் 'யட்சன்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகரும் பாடலாசிரியருமான பா. விஜய் கூறியதாவது:

‘நானும் விஷ்ணுவர்தனும், யுவனும் இணைந்து பணிபுரியும் எட்டாவது படம் இது. எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களையும் நான் எழுதியுள்ளேன். எங்கள் 3 பேரிடம் அப்படி ஒரு நட்பு, புரிதல் உள்ளது. இவர்களுக்கு எழுதும் போது மட்டும் பாடல் எழுதும் மனநிலையில்  நான் போவதில்லை. நண்பர்களைப் பார்க்கப் போவது போல போவேன். இந்தப் படத்தின் மூலம் ஆர்யா என்கிற நண்பனின் நட்பு கிடைத்தது. ஆர்யாவை ஏன் எல்லாப் பெண்களும் கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் தெரியுமா? இதுவரை எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது புரிகிறது. அவர், நட்புக்கு அதிக மரியாதை தருபவர். எளிமையாக, இனிமையாகப் பழகுபவர். அதனால்தான்.

இதுவரை மூவாயிரம் பாடல்கள் எழுதியிருக்கிறேன். நான் பிரஸ்மீட் வைத்து பாட்டெழுத மாட்டேன் என்று சொன்னதில்லை. நடிக்க வந்தபிறகு அப்படி பரப்பி விட்டார்கள். இதன் பாடல்களும் ,'சர்வம்' படத்துக்குப்பிறகு இந்தப்படமும் பெரிய வெற்றியடையும்’ என்றார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா  பேசும்போது, ‘விஷ்ணுவர்தனின் படத்துக்கு மட்டும் யுவன் என்ன ஸ்பெஷலாக செய்திருக்கிறார், என்ன மேஜிக் செய்திருக்கிறார்  என்கிறார்கள். விஷ்ணுவர்தனின் துறுதுறுப்பும் எனர்ஜியும் அவரிடம் பழகினால் நமக்கும் வந்து விடும். அவரை பள்ளி நாள்களிலிருந்தே தெரியும். நல்லதோ கெட்டதோ முகத்துக்கு நேரே சொல்பவர்.’ என்றார்.

கிருஷ்ணா பேசும் போது ‘என்னைப் பார்ப்பவர்கள் எல்லோரும் ஏன் அண்ணன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்பார்கள். இனி கேட்க மாட்டார்கள் .என் முதல் இரண்டு படங்களும் தோல்வி அடைந்தபோது மிகவும் வருத்தப்பட்டேன். அப்போது அண்ணன் 'நேரம் வரும்போது நாம் இணையலாம் 'என்று கூறினார். என் படங்களுக்கு யுவனின் இசை அடையாள அட்டையாக இருந்துள்ளது. 'கழுகு' படவெற்றிக்கு100 சதவிகித காரணம் யுவன் இசைதான’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.