தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆகஸ்ட் 15 அன்று காக்கா முட்டை படம் ஒளிபரப்பு!

இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்கத் தவறியவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு...

News image
Updated On :5 ஆகஸ்ட் 2015, 6:51 am

ரசிகர்களின் பெரும் வரவேற்பு பெற்ற காக்கா முட்டை படம், விஜய் டிவியில் ஆகஸ்ட் 15 அன்று ஒளிபரப்பாக உள்ளது.

50 லட்சம் பட்ஜெட்டில் உருவாகி, 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்த காக்கா முட்டை படத்துக்கு தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய இடமுண்டு. கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் ஒரு படத்தைச் செய்தால் அதிலிருந்தும் வசூலை அள்ளமுடியும் என்று தமிழ்த் திரையுலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. இந்தப் படம் மிகுந்த நம்பிக்கையளிக்கிறது என்று வசந்த பாலன் தொடங்கி பல தமிழ் சினிமா இயக்குநர்களும் கூறியுள்ளார்கள். பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர், ‘காக்கா முட்டை என்ன ஒரு அருமையான படம், நெகிழவைத்துவிட்டது. ஃபாக்ஸ் நிறுவனத்துக்கும் தனுஷூக்கும் வாழ்த்துகள்’ என்று படத்தைப் பாராட்டியது மிகப் பெரிய விளம்பரமாக அமைந்தத. வடமாநிலங்களில் சப்டைட்டிலுடன் வெளியிடப்பட்டதால் வேற்று மொழி பேசும் பலரும் படத்தை ஆர்வத்துடன் பார்த்தார்கள்.  தமிழில் பல சிறிய, அர்த்தமுள்ள படங்கள் வெளிவருவதற்கு காக்கா முட்டை ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது என்று கூறலாம்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரது கூட்டுத் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான 'காக்கா முட்டை படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கர்நாடகாவிலும் இதற்கு வரிவிலக்கு கிடைத்தது. தமிழ்நாட்டில் 109 திரையரங்குகள் உள்ளிட்ட இந்தியா முழுக்க 170 திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்கத் தவறியவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு: வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி காக்கா முட்டை விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.