மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (36) அசினும் (29) கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இதனையடுத்து விரைவில் திருமணம் செய்ய இருவரும் முடிவெடுத்துள்ளார்கள்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அசின் பேட்டியளித்தபோது கூறியதாவது: என்னுடைய எல்லா சினிமா வேலைகளையும் முடித்துக்கொண்டு வருகிறேன். அப்போதுதான் என்னால் என் சொந்த வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கமுடியும். கடந்த இரண்டு வருடங்களாக புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை என்றார்.
இந்நிலையில், அசினுக்கு ராகுல் சர்மாவை நான் தான் அறிமுகம் செய்துவைத்தேன் என்று கூறியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.
அசின் - ராகுல் காதலுக்கு நீங்கள்தான் காரணமா? இருவரையும் நீங்கள்தான் சேர்த்துவைத்தீர்களா என்று அக்ஷய் குமாரிடம் கேட்டதற்கு, ஆமாம், நான்தான் அறிமுகம் செய்துவைத்தேன். ஆனால் ஜோடிகளைச் சேர்த்துவைக்கும் நிறுவனம் எதுவும் ஆரம்பிக்கவில்லை என்றார் வேடிக்கையாக.
அபிஷேக் பச்சன், ரிஷி கபூர் ஆகியோருடன் அசின் நடித்துள்ள ஆல் ஈஸ் வெல் படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளிவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!

நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் தேர்தல் மை! அழிக்க முடியாதது ஏன்?

ஏப். 23 வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளர் கவனத்துக்கு! - நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


