ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் எந்திரன் 2 படத்தில் வில்லனாக நடிக்கிறார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.
இது யாருமே எதிர்பாராதது. எந்திரன் 2-வில் வில்லனாக நடிக்க பலருடைய பெயரும் அடிபட்டது. ஆனால் கடைசியில் அக்ஷய் குமார் நடிக்கப் போகிறார் என்கிற செய்தி பெரிய ஆச்சரியமாக அமைந்துவிட்டது.
ஷங்கர் ஏன் அக்ஷய் குமாரைத் தேர்வு செய்தார்?
எந்திரன் 2-வில் வில்லனாக நடிக்க ஷங்கரின் முதல் தேர்வு அர்னால்ட் தான். ஐ பாடல் வெளியீட்டு விழாவில் ஷங்கர் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் அர்னால்ட். அதனால் எந்திரன் 2 படத்துக்கு முதலில் அவரைத்தான் அணுகினார் ஷங்கர். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் 120 கோடி ரூபாயைச் சம்பளமாக கேட்க, வேறுவழியில்லாமல் பின்வாங்கினார் ஷங்கர்.
இதற்கிடையே விக்ரம், அமீர் கானிடமும் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. வில்லனாக நடிக்கப் போகிறவர் பாலிவுட் நடிகர்தான் என்று ஷங்கர் முடிவு செய்தபிறகு, வழக்கமான பாலிவுட் வில்லன் தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்தார் ஷங்கர். ஒரு வருடம் கால்ஷீட் கொடுக்கக்கூடிய பிரபலமான ஹிந்தி ஹீரோ, ஹிந்தி படம் போல படத்தை பிஸினஸ் செய்வதற்கான தகுதி கொண்டவர் போன்றவை ஷங்கரின் வேண்டுகோளாக இருந்தன. ஆச்சரியமாக ஷங்கரின் விதிமுறைகளுக்குப் பொருத்தமாக இருந்தார் அக்ஷய் குமார். வில்லன் வேடம் என்றாலும் ரஜினிக்கு இணையான கதாபாத்திரம், பெரிய பட்ஜெட் படம் என்பதால் அவரும் ஒப்புக்கொண்டார். ஒரு நல்ல தகுதியான வில்லனைத் தேர்வு செய்ததில் ஆல் ஈஸ் வெல் மூடில் உள்ளது எந்திரன் 2 குழு.
அக்ஷய் குமார், பாலிவுட்டின் பிரபல ஹீரோக்களில் ஒருவர். பாலிவுட்டில் 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்ற படங்களில் அக்ஷய் குமாரின் படங்களும் உள்ளன (ரெளடி ராதோர், ஹாலிடே). அக்ஷய் குமாரின் ஆக்ஷன் காட்சிகள் புகழ்பெற்றவை. பாலிவுட்டின் டாப் 5 நடிகர்களில் இடம்பிடிப்பவர். இதனால் எந்திரன் 2-வுக்கான பாலிவுட் மார்க்கெட்டைப் பிடிக்க அவர் சரியான நபராக இருப்பார்.
இதனால் எந்திரன் 2 படத்தில் ஒரு அட்டகாசமான வில்லன் ஒருவரைத் தேர்வுசெய்து படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளார் ஷங்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


