தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எங்கு நிற்கும் இந்தப் பாய்ச்சல்? 5 நாள்களில் நம்பமுடியாத வசூலை அள்ளிய பாகுபலி!

எந்திரன் 290 கோடி ரூபாய் வசூலித்தது ஒரு சாதனை. அதை வெளியான முதல் வாரத்திலேயே உடைக்க முயன்று வருகிறது

News image
Updated On :15 ஜூலை 2015, 7:06 am

பாகுபலியின் வசூல் நாளுக்கு நாள் மிரட்டிக் கொண்டிருக்கிறது.

முதல் 2 நாள்களில் 100 கோடி வசூலைத் தொட்ட பாகுபலி, இப்போது 5 நாள்களில் 200 கோடியைத் தாண்டிச் சென்றுவிட்டது. இன்னும் படம் வெளியாகி ஒரு வாரமே ஆகாத நிலையில் இதன் வசூல் எங்குப் போய் முடியும் என்று திரையுலகினர் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே மிகவிரைவாக 100 கோடி வசூலைத் தொட்ட படம் என்கிற சாதனையோடு அடுத்ததாக 5 நாள்களில் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளிய முதல் படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது பாகுபலி. செவ்வாய் கிழமை வரை 215 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. வார நாள்களிலும் இதற்கு டிக்கெட் கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை என்பதால் இதன் வேகம் குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது நீடிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் உருவாக்கப்பட்டு, உலகம் முழுக்க 4000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டுமில்லாமல் அமெரிக்காவிலும் சக்கைபோடு போடுகிறது பாகுபலி. அங்கு வெளியான தெலுங்கு பாகுபலி முதல் ஐந்து நாளில் மட்டும் 30 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

ஹிந்தியில் வெளியான பாகுபலி, நம்பமுடியாத வசூலைப் பெற்று வருகிறது. இதுவரை 5 நாள் கணக்காக ரூ. 35 கோடியைக் கல்லா கட்டியுள்ளது.

எந்திரன் 290 கோடி ரூபாய் வசூலித்தது ஒரு சாதனை. அதை வெளியான முதல் வாரத்திலேயே உடைக்க முயன்று வருகிறது பாகுபலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.