ரஜினியின் அடுத்தப் படம் பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்னமும் பெயர் சூட்டப்படாத ரஜினியின் அடுத்தப் படத்தை பா. ரஞ்சித் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கியவர்.
இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ரஜினியின் படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல்முறை. இந்தப் படத்தைத் தயாரிப்பவர், கலைப்புலி தாணு.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட பத்திரிகைக் குறிப்பு:
40 வருடங்களுக்கு முன்பு, சுப்பிரமணியா பிலிம்ஸ், கலைப்புலி இண்டர்நேஷனல் ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களைத் தொடங்கி தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர் கலைப்புலி எஸ். தாணு. ரஜினி நடித்த பைரவி படத்தை வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணுதான், முதன்முறையாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினியின் பெயருடன் இணைத்து பைரவி படத்தை விளம்பரம் செய்தார்.விநியோகஸ்தராக இருந்த கலைப்புலி எஸ். தாணு, 1984 ஆம் ஆண்டு தயாரிப்பாளராகி... யார் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்தார்.
கலைப்புலி எஸ். தாணு தயாரித்து முதன்முறையாக இயக்கிய புதுப்பாடகன் படம் உட்பட அவர் தயாரித்த பல படங்களை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்ததே சூப்பர்ஸ்டார் ரஜினிதான். ரஜினி நடித்த அண்ணாமலை, முத்து, பாட்ஷா ஆகிய படங்கள் உருவாகும் நேரத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் சூழல் இருந்தது, சில பல காரணங்களால் காலதாமதம் ஆனது.

ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என ஏறக்குறைய 35 வருடங்களாக கலைப்புலி எஸ். தாணு தவம் இருந்தார். அவரது தவத்துக்குக் கிடைத்த வரமாக தற்போது, கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் ரஜினி. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் பா.இரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இவர் இயக்கும் மூன்றாவது படம் இது.
கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார். மெட்ராஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

பாடல்கள் - கபிலன், உமாதேவி, கானா பாலா
கலை இயக்கம் - ராமலிங்கம்
படத்தொகுப்பு - பிரவீன் கே.எல்.
சண்டைப்பயிற்சி - அன்பு - அறிவு
நடனம் - சதீஷ்
ஒலி வடிவமைப்பு - ரூபன்
ஆகஸ்ட் மாதம் மலேஷியாவில் படப்பிடிப்பு தொடங்கி, 60 நாட்கள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங்க் மற்றும் சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
*
இந்த அறிவிப்பு வெளியானவுடன் இயக்குநர் ரஞ்சித், பெரும் மகிழ்ச்சி.. உங்கள் வாழ்த்துகளுடன்!!! சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என்று ட்வீட் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


