

குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்காக ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செளர்ந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு, அஸ்வினுக்கும் செப்டம்பர் 3, 2010ல் திருமணம் நடந்தது. செளந்தர்யாவுக்கு மே 6-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து வேலையை ராஜினாமா செய்து குழந்தையைக் கவனித்துக்கொள் என ரஜினி, செளந்தர்யாவுக்கு அறிவுரை வழங்கினார். இதனால் செளந்தர்யா தற்போது ஈராஸ் நிறுவனத்திலிருந்து விலகியுள்ளார். அவர் அந்த நிறுவனத்தின் தென்னிந்தியத் தலைவர் பதவியை வகித்து வந்தார்.
இதுதொடர்பாக செளந்தர்யா ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஈராஸ்-தெற்கு நிறுவனத்திலிருந்து விலகிவிட்டேன். இனிமேல் என் மகனுடன் நேரத்தைச் செலவிடப் போகிறேன். கூடவே அடுத்தப் படத்துக்கான வேலைகளிலும் ஈடுபடுகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.