தூங்காவனம் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் அடுத்தப் பட வேலையையும் ஆரம்பித்துவிட்டார் கமல் ஹாசன். தமிழில் தலைவன் இருக்கிறான், ஹிந்தியில் அமர் ஹை என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.
அமர் ஹை படம் மூலமாக 18 வருடங்களுக்குப் பிறகு ஹிந்தி படத்தை இயக்கவுள்ளார் கமல். இதில் சயிஃப் அலி கானுடன் இணைந்து நடிக்கிறார். தெலுங்கு, மலையாள திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்களும் நடிக்கவுள்ளார்கள். சாச்சி 420-க்குப் பிறகு கமல் இயக்கும் ஹிந்திப் படம் இது.
இதற்கு முன்பு, உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு தலைவன் இருக்கிறான் என்றுதான் முதலில் தலைப்பு வைத்தார் கமல். ஆனால், கதைக்கு அது பொருத்தமாக இல்லாததால் அந்தத் தலைப்பை இப்போது பயன்படுத்தியுள்ளார்.
இந்தப் படத்தை வீரேந்திர கே. அரோரா, அர்ஜுன் என். கபூர் ஆகியோர் தயாரிக்கிறார்கள். அவர்கள் இப்படம் குறித்து கூறும்போது, ‘இந்தப் படம், பல விதங்களில் எங்களுக்கு விசேஷமானது. நீண்ட நாள்கள் கழித்து கமல் ஹாசன் பாலிவுட்டுக்குத் திரும்புகிறார். இதில் நடிகர், இயக்குநர், கதாசிரியர் என பல துறைகளில் பணியாற்றவுள்ளார். கடந்த 6 வருடங்களாக இந்தக் கதையை எழுதிவருகிறார். ஆரம்பம் முதலே சயிஃப் அலி கான் தான் நடிக்க வேண்டும் என நினைத்துள்ளார்’ என்றனர்.
தலைவன் இருக்கிறான் படத்தில் கமல் வில்லனாக நடிக்கவுள்ளார். இதைப் பற்றி அவர் கூறும்போது, ‘எனது பாத்திரம் வழக்கமான எதிர்நாயகனாக இல்லாமல் புதிய கோணத்தைத் தரும்’ என்றார்.
பாலிவுட்டுக்கு மீண்டும் திரும்புவது பற்றி கமல் ஒரு பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘என் செளகரியப்படி ஹிந்திப் படம் இயக்கவே விருப்பம். சொல்லப்படவேண்டிய கதைகளைச் சொல்ல நான் விருப்பப்படும் தருணம் இது. ஹிந்திப் படங்கள் பண்ண எனக்கு விருப்பமே. என்னால் அதிகமான ரசிகர்களைச் சென்றடையமுடியும்.’ என்று கூறியுள்ளார்.
கமல் நடிப்பில் அடுத்ததாக நான்கு படங்கள் வெளிவரவுள்ளன. பாபநாசம் விரைவில் வெளியாகும். அடுத்ததாக விஸ்வரூபம் 2 வெளியாகலாம். அதன்பிறகு தூங்காவனம், தலைவன் இருக்கிறான் என அடுத்தடுத்து 4 படங்கள் வெளியாகவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


