பாயும் புலி படம் கண்டிப்பாக நாளை வெளியாகும்: விஷால் ஆவேசம்!

பிரச்னையை ஏன் கடைசி நேரத்தில் கொண்டுவருகிறார்கள்? அதற்குப் பதிலாக ஒரு மாதத்துக்கு முன்பே இதைச் சரி செய்திருக்கலாம் அல்லவா?
பாயும் புலி படம் கண்டிப்பாக நாளை வெளியாகும்: விஷால் ஆவேசம்!
Updated on
1 min read

பாயும் புலி படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும். ஒரு விநியோகஸ்தருக்காகவும் சில திரையரங்குகளுக்காகவும் ஏன் படத்தை நிறுத்தவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் விஷால்.

விஷால், காஜல் அகர்வால் நடித்த ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பான பிரச்னையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படாததால் வெள்ளிக்கிழமை முதல் படங்களை வெளியிடப் போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதுதொடர்பாக விஷால் தன்  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

பாயும் புலி நாளை (4-ம் தேதி) இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் திட்டமிட்டபடி வெளியாகும். கடின உழைப்புக்கு எப்போதும் பலன் இருக்கும். பிரச்னையை ஏன் கடைசி நேரத்தில் கொண்டுவருகிறார்கள்? அதற்குப் பதிலாக ஒரு மாதத்துக்கு முன்பே இதைச் சரி செய்திருக்கலாம் அல்லவா? இச்செயல் முறையற்றது. ஒரு விநியோகஸ்தருக்காகவும் சில திரையரங்குகளுக்காகவும் ஏன் படத்தை நிறுத்தவேண்டும் என்று விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

சவாலே சமாளி படத்தின் தயாரிப்பாளர் அருண் பாண்டியனும், செங்கல்பட்டு என்ற ஒரு குறிப்பிட்ட எரியாவுக்காக ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தது தவறானது. நாங்களே நினைத்தாலும் படத்தின் ரிலீசை நிறுத்த முடியாது. சவாலே சமாளி நாளை வெளியாகும் என்று பேட்டி அளித்துள்ளார்.

இன்று செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள பாயும் புலி மற்றும் சவாலே சமாளி படங்களின் விளம்பரங்களிலும் நாளை முதல் என்கிற வாசகங்களே இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com