திட்டமிடப்பட்டபடி பாயும் புலி படம் நாளை வெளியாகும். எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தன என்று நடிகர் விஷால், இயக்குநர் சுசீந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளார்கள்.
விஷால், காஜல் அகர்வால் நடித்த ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பான பிரச்னையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படாததால் வெள்ளிக்கிழமை முதல் படங்களை வெளியிடப் போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
இதனால் மிகவும் வருத்தமடைந்த விஷால், பிரச்னையை ஏன் கடைசி நேரத்தில் கொண்டுவருகிறார்கள்? அதற்குப் பதிலாக ஒரு மாதத்துக்கு முன்பே இதைச் சரி செய்திருக்கலாம் அல்லவா? இச்செயல் முறையற்றது. ஒரு விநியோகஸ்தருக்காகவும் சில திரையரங்குகளுக்காகவும் ஏன் படத்தை நிறுத்தவேண்டும் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இன்று பாயும் புலி படம் பிரச்னை தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதனையடுத்து விஷாலும் இயக்குநர் சுசீந்திரனும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதாவது:
பிரச்னைகள் தீர்ந்தன. பாயும் புலி நாளை வெளியாகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவிய சங்கங்களுக்கு நன்றி என்று கூறியுள்ளனர்.
தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
பாயும் புலி உள்ளிட்ட அனைத்து படங்களும் 4-ம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தாணு அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


