மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

காதல் தோல்விக்குப் பிறகு நடித்ததே சிறந்த நடிப்பு: மகளிர் கல்லூரியில் விஷால் பேச்சு! (வீடியோ)

சினிமாவுக்காக என் தனிப்பட்ட வாழ்க்கையை இழந்தேன். என்னால் எங்கும் வெளியே சென்று...

Updated On :11 செப்டம்பர் 2015, 8:31 am

சென்னை எம்.ஓ.பி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விஷால் மற்றும் இயக்குநர் சுசீந்திரன் கலந்து கொண்டார்கள்.  மாணவிகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்கள். அப்போது விஷால் பேசியதாவது:

அவன் இவன் படத்தில் பெண் வேடத்தில் நடித்தபோதுதான் பெண்கள்மீது மரியாதை ஏற்பட்டது. ஹீரோயின் புடைவையைக் கட்ட தாமதம் ஆனாலும் நான் திட்டமாட்டேன். ஏனென்றால் புடைவை கட்ட எவ்வளவு நேரமாகும் என்று எனக்குத் தெரியும்.

என் படங்களில் சிறந்த நடிப்பு எது என்று கேட்கிறீர்கள். என் காதல் தோல்விக்குப் பிறகு நான் நடித்த படம்தான் என்னுடைய  சிறந்த நடிப்பு. இதை இதுவரை வெளியே சொன்னதில்லை. அப்போது நான் மிகவும் உடைந்து போயிருந்தேன். ஷூட்டிங் போகவும் பிடிக்கவில்லை. ஆனால் என் வலி அனைத்தையும் மறந்துவிட்டு மேக்கப் போட்டு நடித்தேன். அதுதான் என் சிறந்த நடிப்பாக இருந்தது. அது எந்தப் படம் என்று சொல்லமாட்டேன்.

சினிமாவுக்காக என் தனிப்பட்ட வாழ்க்கையை இழந்தேன். என்னால் எங்கும் வெளியே சென்று நினைத்ததைச் செய்யமுடியாது. அதனால்தான் நான் இமயமலைக்குச் செல்கிறேன். இங்கு செய்யமுடியாததை அங்கு செய்கிறேன்.

விஷால் - சுசீந்திரன் பேச்சு (வீடியோ)

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.