புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காலா படத்துக்கு ட்விட்டர் எமோஜி - ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்துக்கு பிரத்யேகமான எமோஜியை ட்விட்டர் உருவாக்கியுள்ளது.

News image
Updated On :28 மே 2018, 7:02 am

DIN

தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காலா. இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே வெளிவந்துள்ள இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும், தனிப்பட்ட முறையில் ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்த பிறகு வெளியாகும் அவருடைய முதல் படம் இது. இதுவும் இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 

இந்நிலையில், ட்விட்டர் இந்த படத்துக்காக பிரத்யேக எமோஜியை உருவாக்கியுள்ளது. ஹேஷ்டேக் இட்டு காலா என்று டைப் செய்தால், அது காலா எமோஜியாக மாறிவிடும். இதனால், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர். 

தமிழ் சினிமா வரலாற்றில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்துக்கு பிறகு ட்விட்டர் எமோஜியை வெளியிடும் 2-ஆவது தமிழ் படம் காலா ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.