நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படத்தில் மைக் மோகன், விஜய் சேதுபது இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் வெற்றிப்படமானது.
தற்போது, ஏப்.22ஆம் தேதி ‘தலைவர் 171’ பெயர் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, படத்திற்கு ‘கழுகு’ எனப் பெயரிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வைரலாகின.
இந்த நிலையில், ரஜினிக்கு வில்லனாக நடிகர் மைக் மோகன் நடிக்கவுள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபது நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 68-வது படத்திலும் மைக் மோகன் நடித்துள்ளார்.
ஏற்கெனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
முன்னதாக பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங் ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடிக்க காரணம் இதுதான்: விஜய் சேதுபதி

பாடல் காட்சியுடன் படப்பிடிப்பைத் தொடங்கிய மணிரத்னம்!

மணிரத்னம் - விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்! எங்கு தெரியுமா?

விரைவில் நடிகர் விஜய் சேதுபதியின் டிரெயின் டீசர்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




