ஷங்கர் மகள் வரவேற்பு விழாவில் ரன்வீர் சிங் குத்தாட்டம்!

ரன்வீர் சிங்குடன் நடிகை அதிதி, இயக்குநர் அட்லியும் நடனம்.
ஷங்கர் மகள் வரவேற்பு விழாவில் ரன்வீர் சிங் குத்தாட்டம்!

இயக்குநர் ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் குத்தாட்டம் போட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றது.

இந்தியாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், இந்தியன் 2 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஷங்கருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2022 ஆம் ஆண்டு புதுச்சேரி கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோஹித்தைத் (29) திருமணம் செய்தார். ஆனால், சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரோஹித் போக்சோ வழக்கில் கைதானார். தொடர்ந்து, அவரை விவாகரத்து செய்த ஐஸ்வர்யா, ஷங்கர் வீட்டில் வசித்து வந்தார்.

ஷங்கர் மகள் வரவேற்பு விழாவில் ரன்வீர் சிங் குத்தாட்டம்!
இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

இந்நிலையில், ஐஸ்வர்யாவுக்கும் ஷங்கரின் துணை இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்தம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் சென்னையில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது டிரம்ஸ் சிவமணியின் வாசிக்க, ரன்வீர் சிங் மேடையில் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தார். அவருடன், மணமக்கள், ஷங்கரின் இரண்டாவது மகளும் நடிகையுமான அதிதி, இயக்குநர் அட்லி உள்ளிட்டோரும் நடனமாடினர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com