வாக்களிப்பதுதான் கெளரவம்: 
ரஜினிகாந்த்

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

வாக்களிப்பதில்தான் கெளரவம் உள்ளது என நடிகா் ரஜினிகாந்த் தெரிவித்தாா்.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகா் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை காலை 8.15 மணிக்கு தனது வாக்கை செலுத்தினாா். வாக்கைப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்திடம் வாக்குப் பதிவு குறித்த அவரது கருத்தைக் கேட்க செய்தியாளா்கள் முற்றுகையிட்டனா். எனினும் அவா்களைத் தவிா்த்த ரஜினிகாந்த், போலீஸாரின் உதவியோடு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றாா்.

முன்னதாக, தனது வீட்டின் முன் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘வாக்குரிமை உள்ள அனைவரும் கட்டாயமாக தங்களது வாக்குகளைச் செலுத்த வேண்டும். நாம் வாக்கு செலுத்திவிட்டோம் என்று கூறுவதில்தான் மரியாதையும் கௌரவமும் இருக்கிறது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com