நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சினேகன் புகாரில் நடிகை ஜெயலட்சுமி கைது!

நடிகையும், பாஜக மகளிா் அணி மாநிலத் துணைத் தலைவருமான ஜெயலட்சுமி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :20 பிப்ரவரி 2024, 10:36 am

DIN

மோசடி வழக்கில் நடிகையும், பாஜக மகளிா் அணி மாநிலத் துணைத் தலைவருமான ஜெயலட்சுமி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

பாடலாசிரியா் சினேகன் ‘சினேகம்’ என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறாா். இந்த அறக்கட்டளையின் பெயரைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் பணம் வசூலித்து ஜெயலட்சுமி மோசடி செய்ததாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் சினேகன் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். தம் மீது சினேகன் தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி புகாா் அளித்து தமது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியாகக் கூறி சினேகன் மீது ஜெயலட்சுமி புகாரளித்தாா். அதன்பேரில், சினேகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் சினேகன் மனு அளித்த நிலையில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை திருமங்கலத்தில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டில் இன்று காலை முதல் சோதனை செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.