தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

பல்வேறு பாகங்களாக உருவாகவிருக்கும் மகாபாரதம்: இந்த ஆண்டு பணிகள் தொடங்கும் -ஆமிர் கான்

மகாபாரத் திரைப்படப் பணிகள் இந்த ஆண்டு ஆரம்பம்: நடிகர் ஆமிர் கான்

Published On :

மகாபாரத காப்பியத்தை கதைக்களமாகக் கொண்டு நடிகர் ஆமிர் கான் ‘மகாபாரத்’ என்ற பெயரில் திரைப்படத்தை படமாக்கப்போவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அண்மையில் அவர் அளித்துள்ளதொரு பேட்டியில், மேற்கண்ட தகவலை ஆமிர் கான் பகிர்ந்துள்ளார். ’மகாபாரத்’ படப் பணிகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும் என்றும், ஒரே பாகமாக ‘மகாபாரத்’ எடுக்கப்படாது என்றும், பல்வேறு பாகங்களாக இத்திரைப்படம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதற்கான பணிகளில் ஆமிர் கானும் அவரது குழுவும் ஈடுபட்டிருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படுமென்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆமிர் கான் தமது கனவு திரைக்காவியமாக அமையப் போகும் ’மகாபாரத்’ குறித்து பேசியிருக்கிறார்.

பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய மகாபாரத காப்பியத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் எந்தெந்த நடிகர்கள் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பல பாகங்களாக உருவாகவிருக்கும் ‘மகாபாரத்’ திரைப்படத்தில் ஒவ்வொரு பாகத்திலும் இயக்குநர்களாக வெவ்வேறு இயக்குநர்கள் பணியாற்றுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும் பொருள் செலவில் மிகப் பிரம்மாண்டமாக இத்திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.