4 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்
தரமணி விபத்தில் இறந்த தொழிலாளியின் வாரிசுகள் 2 பேர், படப்பிடிப்பில் இறந்த தொழிலாளியின் வாரிசுகள் 2 பேர் என 4 பேரின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.


தரமணி விபத்தில் இறந்த தொழிலாளியின் வாரிசுகள் 2 பேர், படப்பிடிப்பில் இறந்த தொழிலாளியின் வாரிசுகள் 2 பேர் என 4 பேரின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த மத்திய கைலாஷ் அருகே கடந்த சில வாரங்களுக்கு முன் அதிகாலையில் மது அருந்திவிட்டு வந்த ஒரு பெண்ணின் கார் மோதியதில், தொழிலாளி முனுசாமி (53) உயிரிழந்தார். அவரது மகன் ஆனந்த் 11-ஆம் வகுப்பும், மகள் திவ்யா 7-ஆம் வகுப்பும் திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
வறுமையில் முனுசாமியின் குடும்பம் வாடும் நிலையில், இருவரும் பள்ளி முதல் கல்லூரி வரை அவர்கள் விரும்பி படிக்க ஆசைப்படும் படிப்புக்கான செலவை தேவி அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பில் இறந்தவரின் குடும்பத்துக்கும்... இதேபோல், தான் நடித்து வரும் "கத்தி சண்டை' படப்பிடிப்பின்போது மாரடைப்பில் இறந்த தொழிலாளி செல்வத்தின் பிள்ளைகளான ஆகாஷ், சந்தோஷ் ஆகிய இருவரும் விரும்பியதைப் படிப்பதற்கான செலவையும் தேவி அறக்கட்டளை ஏற்கும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...