சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத்.
சமீபத்தில் வெளியான ரெமோ, வசூலில் சாதனை நிகழ்த்தியது. முதல் நாளிலேயே ரூ. 8 கோடி வரை வசூல் செய்தது. சிவகார்த்திகேயன் படங்களில் அதிக வசூல் கண்டது ரெமோதான். இந்நிலையில் இந்தப் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நேற்று வெளியானது.
ரெமோ, தெலுங்கிலும் வெற்றி பெற்றுள்ளதாக அதன் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ரெமோ படம் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்குக் கிடைத்த வசூல் மூலம் தெலுங்குத் திரையுலகின் பெரிய நட்சத்திரக் கூட்டத்தில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். வெளியான அனைத்து திரையரங்கிலும் நல்ல வசூல் கிடைத்துள்ளது. இதற்குக் கிடைத்த வரவேற்பு இதர படங்களுக்கு முன்னுதாரணமாக அமையும். பணத்தட்டுப்பாடு சமயத்திலும் வசூலில் ஏறுமுகமாக உள்ளது. அதே நாளில் வெளியான மற்ற படங்களை விடவும் அதிக வசூலைப் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


