யோகி படத்தில் அறிமுகமாகி, காக்கா முட்டை படத்தில் கவனம் பெற்று அடுத்ததாக ரெமோ, ஆண்டவன் கட்டளை படங்களில் அசத்தலாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு இன்றைய தேதிக்கு அதிகப் படங்களில் நடிக்கும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.
ஆண்டவன் கட்டளை படத்தில் இவர் பேசுகிற ஒவ்வொரு வசனத்துக்கும் ரசிகர்களின் கைத்தட்டல் கிடைத்தது. இதைக் கவனித்த நடிகர்களும் இயக்குநர்களும் தங்களுடைய படங்களில் யோகி பாபுவை நடிக்க வைக்க ஆர்வம் காண்பித்துவருகிறார்கள். வடிவேலு, சந்தானம், சூரி என சமகால நகைச்சுவை நடிகர்களின் சாயல் இன்றி தனித்துவமாக அவருடைய நகைச்சுவைக் காட்சிகள் உள்ளதால் ரசிகர்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளார். ரெமோ படத்தில் இவர் தோன்றிய அனைத்து காட்சிகளுக்கும் கைத்தட்டல்களும் விசில்களும் கிடைத்தது இன்னொரு சான்று.
இந்நிலையில் தற்போது வீர சிவாஜி, அட்டி, வீரா, ஓடி ஓடி உழைக்கணும், நகர்வலம், மோ, ஆளுக்கு பாதி, சரவணன் இருக்க பயமேன் என வரிசையாகப் படங்களில் நடித்துவருகிறார் யோகி பாபு. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியர் செல்லா அய்யாவு கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றைத் தயாரித்து நடிக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். இதிலும் நகைச்சுவை நடிகராக ஒப்பந்தமாகியுள்ளார் யோகி பாபு. மேலும் பெரிய நடிகர்களின் படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் குடிநீா் தட்டுப்பாடு அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

மின் கட்டணம்: கீரனூா் பகுதி மக்களுக்கு மின் வாரியம் அறிவுறுத்தல்

அமெரிக்கா சென்ற மூதாட்டியின் வீட்டில் தங்க நகைகள் திருட்டு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


