வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் 'சைத்தான்'  படத்திலிருந்து நீக்கம்: விஜய் ஆண்டனி!

விரைவில் வெளிவர உள்ள தன்னுடைய 'சைத்தான்' திரைப்பட டீஸரில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய  பாடல் வரிகளை மாற்றம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக இசைமையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:41 am

DIN

சென்னை: விரைவில் வெளிவர உள்ள தன்னுடைய 'சைத்தான்' திரைப்பட டீஸரில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய  பாடல் வரிகளை மாற்றம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக இசைமையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில், விரைவில் திரைக்கு வரவுள்ள படம் 'சைத்தான்'. பிரதீப் இயக்கியிருக்கும் இப்படத்தை விஜய் ஆண்டனியே  தயாரித்து இசையமைத்திருக்கிறார்.

இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. இதன் டீஸர் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. டீஸரில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் சமஸ்கிருத மந்திரத்தை போல் அமைந்திருப்பதாக சர்ச்சை உண்டானது. இதனால், இப்படத்துக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து விஜய் ஆண்டணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'சைத்தான்' படத்தின் டீஸரில்  ஒலிக்கும் பாடல் வரிகள், சமஸ்கிருத மந்திரம் ஒன்றின் சாயலை ஒட்டி இருப்பதால், சிலர் மனவருத்தத்துக்கு உள்ளானதை நான் அறிந்தேன்.

அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க அந்த வரிகளை உடனடியாக மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளேன்.

எனது Youtube, Facebook மற்றும் Twitter பக்கங்களில் இன்று நீங்கள் 'சைத்தான்' படத்தின் டீஸரை காண முடியாது. புதிய வரிகளுடன் பாடல் பதிவு செய்து, நாளை புதிய டீஸரை வெளியிடுகிறேன்'

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.