சென்னை: 'டிமாண்டி காலனி' படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் புதிய படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் அணுகப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.
'டிமாண்டி காலனி' படம் மூலம் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவரது இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படம் 'இமைக்கா நொடிகள்'. இந்த படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில், நடிகை நயன்தாரா ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் அணுகப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியதாவது:
நாங்கள் இயக்குனர் அனுராக் காஷ்யப்பை அணுகியது உண்மைதான். ஆனால் இதுவரை எதுவும் உறுதியாகவில்லை. அனுராக்கின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனரான அனுராக் காஷ்யப், சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'அகிரா' திரைப்படத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் தமிழில் வெளிவந்த 'மவுனகுரு' படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


