சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத்.
கடந்த வெள்ளியன்று வெளியான ரெமோ, வசூலில் சாதனை நிகழ்த்தி வருகிறது. முதல் நாளிலேயே ரூ. 8 கோடி வரை வசூல் செய்தது. சிவகார்த்திகேயன் படங்களில் அதிக முதல்நாள் வசூல் கண்டது ரெமோதான்.
இப்போது விடுமுறை தினங்களின் வசூலாக ரூ. 50 கோடியை அள்ளியிருக்கிறது. இந்தப் படத்துக்குத் தமிழ்நாட்டில் ரூ. 37 கோடியும் வெளிநாட்டில் ரூ. 13 கோடியும் முதல் வாரத்தில் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை ரெமோ பட தயாரிப்பு நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை வெளிவந்த சிவகார்த்திகேயன் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது ரெமோ.
இதன் அடிப்படையில், 2016-ன் சூப்பர் ஹிட் படங்களான கபாலி, தெறி ஆகியவற்றுடன் ரெமோவும் இணைந்துகொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


