இயக்குனர் பிரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’திரைப்படம் 74 வது ஆண்டு கோல்டன் குளோப் விருதின் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறது என்பது பழைய செய்தி. திங்களன்று மும்பையில் நடைபெற்ற JIO MAMI 18 வது மும்பைத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பிரியதர்ஷன் தெரிவித்த புது செய்தி என்ன தெரியுமா? பிரகாஷ் ராஜ் இந்தப் படத்தில் நடிப்பதற்கு பணமே பெற்றுக் கொள்ளவில்லை என்பது தான். திரைப்படக் கலையின் மீது தீராக்காதல் கொண்ட ஒரு மகத்தான இயக்குநரும், மகா நடிகரும் இணைந்தால் இப்படிப்பட்ட ஆச்சர்யங்கள் நிகழ்வது சாத்தியமே!

எய்ட்ஸ் இருக்கிறதா? இல்லையா எனப் பரிசோதனை செய்து கொள்ள வரும் எட்டு கதாபாத்திரங்களிடையே மருத்துவமனையின் பேத்தாலஜி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிகழும் சம்பவங்களின் தொகுப்பே “சில சமயங்களில்” திரைப்படத்தின் கதை. எய்ட்ஸ் விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட இம்மாதிரியான ஒரு கதையை வைத்து எளிதாக ஒரு டாக்குமெண்டரி படமெடுத்திருக்கலாம். ஆனால் அதற்கான பார்வையாளர்கள் மிகவும் குறைவு. இந்தப் படம் அடைய வேண்டிய இலக்கு பெரியது என்பதால் தான் இதை நகைச்சுவையும், சுவாரஸ்யமும் கலந்து வெகு ஜன ரசனையில் படமாக்கி இருப்பதாக இயக்குநர் பிரியதர்ஷன் தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விநியோக சிக்கலுக்கு தீா்வுகாண இந்தியா-கத்தாா் ஆலோசனை

கரூா் தொகுதியில் வெல்வேன்: தவெக வேட்பாளா் பேட்டி

ஐ-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


