கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

செளந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி மனுத்தாக்கல்?

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, கணவர் அஷ்வினுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டத்தையடுத்து...

News image
Updated On :16 செப்டம்பர் 2016, 10:04 am

DIN

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, கணவர் அஷ்வினுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் செளந்தர்யா ரஜினிகாந்த். இந்தத் தம்பதியருக்கு வேத் என்கிற மகன் உண்டு.

இந்நிலையில், சமீபத்தில் செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் செளந்தர்யா மற்றும் அஷ்வின் ஆகிய இருதரப்பும் மனுத்தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Story image

இது தொடர்பாக செளந்தர்யா மற்றும் அஷ்வின் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.