அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நடிகை வித்யா பாலனுக்கு டெங்கு காய்ச்சல்!

கஹானி 2 படப்பிடிப்புக்காக அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் மும்பைக்குத் திரும்பிய பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :17 செப்டம்பர் 2016, 7:48 am

DIN

கஹானி 2 படப்பிடிப்புக்காக அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் மும்பைக்குத் திரும்பிய பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிலிருந்த திரும்பிய வித்யா பாலனுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வித்யா பாலன், 10 நாள்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இதனையடுத்து மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் வித்யா பாலன் வீட்டில் ஆய்வு செய்தார்கள். அப்போது அதே ஃபிளாட்டில் வசிக்கும் ஷாகித் கபூரின் வீட்டில் டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் கொசுவின் லார்வாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பிறகு அந்த லார்வாக்கள் அழிக்கப்பட்டு, மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஷாகித் கபூர் உள்ளிட்ட இருவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.