மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சூர்யா மற்றும் லிங்குசாமியின் பாராட்டுகளைப் பெற்றார் பாரத் சீனி!

'கடுகு' படத்தில், அனிரூத் கதாபாத்திரத்தில் நடித்த பாரத் சீனிக்கு, நான்கு முனைகளில்

News image
Updated On :4 ஏப்ரல் 2017, 10:21 am

DIN

'கடுகு' படத்தில், அனிரூத் கதாபாத்திரத்தில் நடித்த பாரத் சீனிக்கு, நான்கு முனைகளில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றது. நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் லிங்குசாமி ஆகியோரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார் பாரத் சீனி!

தன்னை  ஒரு படைப்பாளியாக 'கடுகு'  திரைப்படம் மூலம்  மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார், இயக்குநர் விஜய் மில்டன். வர்த்தக ரீதியான வெற்றி மற்றும்   சினிமா விமர்சகர்கள், ரசிகர்களின்   பாராட்டுகள் என இவை அனைத்தும், விஜய் மில்டனின் குழுவிற்கு மேலும் ஊக்கத்தை தந்து இருக்கின்றது. கடுகு படத்தின் தயாரிப்பாளரான பாரத் சீனி, இந்த படத்தில்  இசையமைப்பாளர் அனிருத்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

'பாரத் சீனியின்' அனிரூத்' கதாபாத்திரம், நாங்கள் எதிர்பார்த்தததை விட எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கின்றது. அவருடைய யதார்த்தமான நடிப்பு, சூர்யா சாரை வெகுவாக கவர்ந்து இருப்பது மட்டுமின்றி அவரின் பாராட்டுகளையும் பெற்று இருக்கின்றது. மேலும் பாரத் சீனி இயக்குநர் லிங்குசாமியின் உதவியாளர். அந்த வகையில் அவரை ஒரு நடிகராக திரையில் பார்த்த லிங்குசாமி சார், பெரும் மகிழ்ச்சியுற்றார். இவர்களின் பாராட்டுக்கள், பாரத் சீனிக்கு மகிழ்ச்சி மட்டுமின்றி ஊக்கத்தையும், புது உற்சாகத்தையும் தந்திருக்கிறது. அவருடைய நகைச்சுவை பாணியும், ஒரு வரி நகைச்சுவை வசனங்களும், ரசிகர்களின் கைதட்டல்களை அவருக்கு பெற்று தந்து இருப்பது, எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது’ என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் விஜய் மில்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.