செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கவண் சூப்பர் ஹிட்: வசூல் விவரம் அதிகாரபூர்வமாக வெளியீடு!

விஜய் சேதுபதியின் வேறெந்தப் படமும் முதல் மூன்று நாள்களில் இந்த வசூலைப் பெற்றதில்லை.

News image
Updated On :4 ஏப்ரல் 2017, 5:23 am

விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் சூப்பர் ஹிட் படம் என்றால் அது கவண் தான்.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா நடித்துள்ள படம் - கவண். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் தமிழகம் முழுக்க ரூ. 10.17 கோடி வசூல் பெற்றுள்ளது. இத்தகவலை ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் வேறெந்தப் படமும் முதல் மூன்று நாள்களில் இந்த வசூலைப் பெற்றதில்லை. மேலும் திங்கள் கிழமையும் வசூல் சீராக உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.