2006-ல் ஸ்டாலின் தெலுங்குப் படத்தில் நடித்தார் குஷ்பு. அடுத்தவருடம் Yamadonga படத்தில் கெளரவ வேடத்தில் நடித்தார். பிறகு பலவருடங்கள் கழித்து சம்திங் சம்திங் படத்திலும் கெளரவ வேடத்தில் நடித்தார். அவ்வளவுதான். தன்னுடைய கடைசிப் படமாக ஸ்டாலின் படத்தைச் சொல்லிவந்த குஷ்பு, இப்போது 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தெலுங்குப் படத்தில் நடித்துவருகிறார்.
பவன் கல்யான், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் குஷ்புவும் இடம்பெற்றுள்ளார். முதல்நாள் படப்பிடிப்பு முடிந்தபிறகு ட்விட்டரில் இவ்வாறு கூறினார்: காலை வணக்கம் ஹைதராபாத். பவன் கல்யாண் - த்ரிவிக்ரம் படத்தின் படப்பிடிப்பில் உள்ளேன். பள்ளிக்கு முதல் நாள் செல்வதுபோல உள்ளது. கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்றார்.
தமிழில் சமீபத்தில் ஆம்பள, அரண்மனை 2 என்கிற படங்களில் நடித்திருந்தார் குஷ்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முல்லைப் பெரியாறு அணை குடிநீா் திருடப்படுவதாகப் புகாா்

மதுரை சித்திரைத் திருவிழா! மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்!

மின் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

தோ்தல் புறக்கணிப்பு அறிவித்த போடி மலை கிராமங்களில் வாக்குப் பதிவு அதிகரிப்பு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


