எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சிவலிங்கா ஹிட்: லாரன்ஸ் ‘மகிழ்ச்சி’ அறிக்கை!

இதை நான் மறக்கமாட்டேன். உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

News image
Updated On :17 ஏப்ரல் 2017, 9:49 am

தமிழ்ப் புத்தாண்டன்று தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்துள்ள பவர் பாண்டி, ஆர்யா நடித்துள்ள கடம்பன், லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா ஆகிய படங்கள் வெளியாகின. 

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள சிவலிங்கா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் லாரன்ஸ். பி. வாசு இயக்கியுள்ள இப்படத்தில் ரித்திகா சிங், சக்தி வாசு போன்றோரும் நடித்துள்ளார்கள். 

இந்நிலையில் இந்த மூன்று படங்களில் சிவலிங்கா சென்னையில் அதிக வசூலைப் பெற்றுள்ளது. முதல் மூன்று நாள்களில் இதன் வசூல் கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை கிடைத்துள்ளதாக அறியப்படுகின்றன. ப.பாண்டி, கடம்பன் ஆகிய படங்களும் கிட்டத்தட்ட தலா ரூ. 50 லட்சங்களைப் பெற்றுள்ளன.

இதையடுத்து சமூகவலைத்தளத்தில் லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் வணக்கம்,

சிவலிங்கா படத்துக்கு நல்ல தொடக்க வசூல் கிடைத்துள்ளது. எல்லாம் உங்களால்தான். மேலும் சிவலிங்கா படம் ஹிட் ஆகியுள்ளது. 

இதை நான் மறக்கமாட்டேன். உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. என்னுடைய பணியையும் சேவையையும் தொடர்வேன். நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.