

சிறந்த படங்களைப் பாராட்டுவது ரஜினியின் வழக்கம்.
அதன் அடிப்படையில் தற்போது ரஜினியின் பாராட்டுக்கு உரிய படம் 8 தோட்டாக்கள்.
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் போன்றோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் - 8 தோட்டாக்கள். .
புதுமுகங்கள் நடித்த படமென்றாலும் பலராலும் பாராட்டப்பட்டது. இதனால் நல்ல கவனம் கிடைத்தது. இதன் உச்சமாக ரஜினியின் பாராட்டும் கிடைத்துள்ளது.
ரஜினி படம் பார்க்க விரும்பியதால் அதற்குப் படக்குழு ஏற்பாடு செய்தது. இதையடுத்து படம் பார்த்த ரஜினி, இயக்குநர் மற்றும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார். பலரும் பாராட்டுவதற்கான தகுதியான படம் என்று இயக்குநருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.