சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சமந்தா இதற்காகத்தான் சிலம்பம் கற்றுக்கொள்கிறாரா?

பொன்ராமின் அடுத்தப் படத்தில் சிவகார்த்திகேயனும் சமந்தாவும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

News image
Updated On :29 ஏப்ரல் 2017, 7:10 am

தான் சிலம்பம் கற்றுவருவதாகச் சில நாள்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டார் நடிகை சமந்தா. பொதுவாக நடிகைகள் சினிமாவுக்கு உகந்த பல்வேறு கலைகளைக் கற்றுக்கொள்வார்களே தவிர சிலம்பம் போன்ற ஒரு கலையைக் கற்றுக்கொள்வது அரிது. இதனால் சமந்தாவுக்குப் பாராட்டுகள் குவிந்தன.

ஆனால் அவர் சிலம்பக் கலையை சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடிக்கும் படத்துக்காகத்தான் கற்றுக்கொண்டுவருகிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களை இயக்கிய பொன்ராமின் அடுத்தப் படத்தில் சிவகார்த்திகேயனும் சமந்தாவும் ஜோடியாக நடிக்கிறார்கள். அதற்காகத் தற்போது தீவிரமாக சிலம்பம் கற்றுவருகிறார் சமந்தா.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் என்கிற படத்தில் நடித்துவருகிறார். இதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் - பொன்ராம் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.