யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

செப்டம்பர் 1 அன்று வெளிவரும் புரியாத புதிர்!

புரியாத புதிர் படம் செப்டம்பர் 1 அன்று வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..

News image
Updated On :3 ஆகஸ்ட் 2017, 11:17 am

எழில்

விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்கிய படம் - புரியாத புதிர். இந்தப் படத்தின் வெளியீடு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போனது. 

இந்நிலையில் புரியாத புதிர் படம் செப்டம்பர் 1 அன்று வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கவண், விக்ரம் வேதா ஆகிய இரு படங்கள் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து புரியாத புதிர் படம் செப்டம்பர் 1 அன்று வெளிவரவுள்ளது. 

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா நடிப்பில் உருவாகியுள்ள படம் - இடம் பொருள் ஏவல். யுவன் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியால் இந்தப் படமும் நீண்ட நாளாக வெளிவராமல் உள்ளது. தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி சேர்ந்த படம் இது. இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவலை இயக்குநர் சீனு ராமசாமி சமீபத்தில் வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: இடம் பொருள் ஏவல் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது என்று கூறினார். 

எனவே புரியாத படம் வெளியான பிறகு இடம் பொருள் ஏவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.