தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் ஜூலை 28-ம் தேதி வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 11 அன்று உலகம் முழுக்க 1000 திரையரங்குகளில் வெளியானது.
தமிழில் ஆகஸ்ட் 11 அன்று வெளியான இந்தப் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஆகஸ்ட் 18 அன்று வெளியாகிறது. இதன் ஹிந்திப் பதிப்பு வடஇந்தியாவில் 1600 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வேலையில்லா பட்டதாரி 2, முதல் மூன்று நாள்களில் ரூ. 24 கோடி வசூலித்துள்ளது. முதல் வாரத்தில் விடுமுறைகளின் காரணமாக எப்படியும் ரூ. 30 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மட்டும் முதல் 5 நாள்களில் ரூ. 6.7 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
விதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் வண்ண மலர்களால் அலங்காரம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


