மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தில் நாயகியாக நயன்தாரா!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் 102-வது படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2017, 7:18 am

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் 102-வது படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

தற்போது பாலகிருஷ்ணா நடித்து வந்த ‘பைசா வசூல்’ திரைப்படம் செப்டம்பர் 1, 2017 அன்று திரைக்கு வரவிருப்பதால், தனது 102-வது படத்திற்கான வேலைகளில் பாலகிருஷ்ணா இறங்கியுள்ளார். தமிழ் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Story image

இதற்கு முன்பு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ‘ஸ்ரீ ராமராஜியம்’ மற்றும் ‘சிம்ஹா’ ஆகிய இரு படங்களும் வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சி.கல்யாண் தயாரிக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமோஜி ஃபில்ம் சிட்டியில் பிரத்யேகமாக வடிவமைக்கப்படவுள்ள அரங்கில் நிகழ உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும் ‘ஜெய சிம்ஹா’ எனப் பெயர் சூட்டப் படக்குழு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.