சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு 'கோலமாவு கோகிலா என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தற்போது `அறம்', `கொலையுதிர் காலம்', `இமைக்கா நொடிகள்', உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்திருக்கும் `வேலைக்காரன்' படமானது வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், அறிமுக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க நயன்தாரா தற்பொழுது ஒப்பந்தமாகி இருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் தயாரிக்கும் இந்தப் படமானது முழுக்க காமெடி படமாக உருவாக உள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவும், ஆர்.நிர்மல் படத்தொகுப்பு பணிகளையும் இப்படத்திற்கு மேற்கொள்ள இருக்கின்றனர். சண்டைக் கலைஞராக மகேஷும், கலை இயக்குநராக அமரனும், ஆடை வடிவமைப்பாளராக அனுவர்தனும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் இப்படம் பற்றிய தகவல்கள் அடங்கிய வீடியோவை இன்று சமூக வலை தளங்களில் வெளியிட்டார். படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


