புஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதாநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன் தமிழ்நாட்டை காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா?எம்.எல்.ஏ. காமராஜ் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக உயர்வு!தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆதரவு!முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!
/

செப்டம்பர் 1: விஜய் சேதுபதியின் புரியாத புதிர் உள்ளிட்ட 3 படங்கள் வெளியீடு!

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கவண், விக்ரம் வேதா ஆகிய இரு படங்கள் வெற்றி பெற்றுள்ளது...

News image
Updated On :30 ஆகஸ்ட் 2017, 3:41 pm IST

இந்த வாரம் செப்டம்பர் 1 அன்று மூன்று படங்கள் வெளிவரவுள்ளன. புரியாத புதிர், மாயவன், ஒரு கனவு போல.

விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்கிய படம் - புரியாத புதிர். இந்தப் படத்தின் வெளியீடு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போனது.  இந்நிலையில் புரியாத புதிர் படம் செப்டம்பர் 1 அன்று வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கவண், விக்ரம் வேதா ஆகிய இரு படங்கள் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து புரியாத புதிர் படம் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'மாயவன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சி.வி.குமார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 

ராமகிருஷ்ணன், செளந்தர்ராஜன், புதுமுகம் அமலா நடிப்பில் விஜயசங்கர் இயக்கியுள்ள படம் - ஒரு கனவு போல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.