இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

'ஜும்பா' படத்தில் விஜய் சேதுபதியின் நாயகியாகிறார் சாயிஷா!

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் 'குமுதா ஹாப்பி’ எனும் டயலாக்கை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:46 pm

DIN

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் 'குமுதா ஹாப்பி’ டயலாக்கை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அந்தளவுக்கு படம் முழுவதிலும் விஜய் சேதுபதி கலக்கியிருப்பார். காஷ்மோராவிற்குப் பின் இயக்குனர் கோகுல் விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைய நினைத்தார். அந்தப் படம் இ.ஆ.பா.வின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடாது என்ற முடிவிலும் இருந்தார்.

Story image

புதிய கதையை ஐம்பது சதவிகிதம் எழுதி முடித்த பின் உற்சாகமானார் கோகுல். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவை விட சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய உள்ள இப்படத்துக்கு ஜுங்கா என்று தலைப்பிட்டார். ரொமான்ஸ் காமெடி ஜானர் படமான ஜுங்காவின் தலைப்பே வித்யாசமாக இருப்பதால் இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிட்டது. ஜுங்காவின் விளக்கத்தைச் சொன்னால் சஸ்பென்ஸ் இருக்காது என்பதால் படத்தின் பெயர்க் காரணத்தை ரகசியமாக வைத்துள்ளார் கோகுல்.

Story image

இந்த வருடம் வெளியான கவண் மற்றும் விக்ரம் வேதா ஆகிய இரண்டு படங்களும் வெற்றிப்பெற்ற நிலையில் விஜய் சேதுபதி கோலிவுட்டில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராகிவிட்டார். ஜுங்காவில் விஜய் சேதுபதிக்கு மீண்டும் தாதா வேடம். ஆனால் உள்ளூர் தாதாவல்ல, இம்முறை வெளிநாட்டு டானாக நடிக்கவிருக்கிறார். பில்லா பாணியில் ஸ்டைலிஷாக படம் இருக்கும் என்றார்கள் இயக்குனர் தரப்பினர்.

Story image

விஜய் சேதுபதியின் நாயகியாக வனமகன் படத்தில் நடித்த சாயிஷா சைகல் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  சாயிஷா இப்படத்தில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளார். இதில் பாரீஸில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணாக அவர் நடிக்கிறார். 

சாபு ஜோசப் எடிட்டராக ஒப்பந்தமாகியுள்ள இப்படத்திற்கு இசையமைக்கிறார் சித்தார்த் விபின். படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறும் என்றார் அவர். இப்படத்தின் படப்பிடிப்பு பாரீஸில் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் என்றனர் படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.