கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டிவிட்டரில் ரஜினியை மிஞ்சிய ஓவியாவின் அந்த 'ஒற்றை ட்வீட்'!

பிரபல சமூக வலைதளமான டிவிட்டரில் நடிகை ஓவியாவின் ட்வீட் ஒன்று, 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் ட்வீட்டினை விட மிகவும் பிரபலமாக பகிரப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:46 pm

DIN

சென்னை: பிரபல சமூக வலைதளமான டிவிட்டரில் நடிகை ஓவியாவின் ட்வீட் ஒன்று, 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் ட்வீட்டினை விட மிகவும் பிரபலமாக பகிரப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் 'சூப்பர் ஸ்டார்' என்று புகழப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். திரைப்பிரபலங்கள் அநேகம் பேர் டிவிட்டரில் இருந்தாலும், திரைப்பட விளம்பரங்கள், விமர்சனங்கள் உள்ளிட்டவற்றில்  தற்பொழுதெல்லாம் டிவிட்டர் முக்கிய பங்கு வகித்தாலும் ரஜினிகாந்த் கொஞ்சம் தாமதமாக 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான்  டிவிட்டரில் இணைந்தார். தற்பொழுது டிவிட்டரில் அவரை 41,20,543 பேர் பின்தொடர்கின்றனர்.

அதேபோல கேரளாவைச் சேர்ந்தவரான நடிகை ஓவியா சில தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. அதிலும் நிகழ்ச்சியில் அவர் மற்ற போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்ட பொழுது அவருக்கு வெளியில் ஆதரவு பன்மடங்கு பெருகியது. 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிவிட்டரில் நடிகை ஓவியா செயல்பட்டு வருகிறார். தற்பொழுது டிவிட்டரில் அவரை 2,49,694 பேர் பின்தொடர்கின்றனர். 

இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் '2.0' திரைப்படத்தின்    தயாரிப்பு காட்சிகள் அடங்கிய வீடியோ கடந்த 25-ஆம் தேதி மாலை வெளியாகியாது. அதை நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தற்பொழுது வரை அந்த ட்வீட்டுக்கு 27,957 பேர் 'லைக்' இட்டுள்ளனர்.  8,851 பேர் அதனை 'ரீட்வீட்' செய்துள்ளனர்.       

Story image

அதே நேரம் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நடிகை ஓவியா முதன்முறையாக தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு ட்வீட்டை கடந்த 28-ஆம் தேதி மாலை வெளியிட்டார். தற்பொழுது வரை அந்த ட்வீட்டுக்கு 56,741 பேர் 'லைக்' இட்டுள்ளனர்.  15,493 பேர் அதனை 'ரீட்வீட்' செய்துள்ளனர்.     

Story image

தமிழகத்தில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் ட்வீட்டினை விட  நடிகை ஓவியாவின் ட்வீட் ஒன்று  மிகவும் பிரபலமாக விரும்பப்பட்டுள்ளதும் பகிரப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.