
சென்னை: நாளை முதல் பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடபழனியில் உள்ள பெப்சி தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் இன்று அந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழுவின் முடிவில்தான் நாளை முதல் பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக பெப்சி தொழிலாளர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்புகளை நடத்த முடியாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.
அந்த நிலைப்பாட்டில் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியாக இருக்கும் நிலையில் பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.