மும்பை: பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகர் சசிகபூர் (79) உடல்நலக் குறைவால் மும்பையில் திங்களன்று காலமானார்.
1960 மற்றும் 70 ஆம் ஆண்டு வாக்கில் இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமாக விளங்கியவர் சசிகபூர். பாரம்பரியம் மிக்க குடுமபத்தைச் சேர்ந்தவர். கொல்கத்தாவில் பிறந்த சசிகபூர் தனது குழந்தை பருவம் முதல் (1940) சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார்.
1961 முதல் இதுவரை 100-க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்து உள்ளார். 3 முறை தேசிய விருதுகள் வாங்கி உள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் படங்களை இயக்குவதிலும், தயாரிப்பதிலும் ஈடுபட்டு இருந்தார். ,
பிலிம்பேர் இதழின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பத்மபூஷன் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் நீண்ட நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் சசிகபூரின் மறைவுச் செய்தியை நடிகர் மோகித் மார்வா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காலமான சசிகபூருக்கு குணால் கபூர், கரண் கபூர் என இரு மகன்களும், சஞ்சனா கபூர் என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவியான ஜெனிபர் கெண்டால் 1984 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


