சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இணையும் விஜய் - முருகதாஸ்! அதிகாரபூர்வ அறிவிப்பு!
மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார்...


மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு விஜய் - முருகதாஸ் இணையும் மூன்றாவது படமிது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.
ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி, தீபாவளி அன்று படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சல் படத்துக்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்துக்கும் இசையமைப்பார் என்றும் அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...