மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விஷாலிடம் கணக்கு கேட்டு கலாட்டா: இருபது நிமிடத்தில் முடிந்த தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு! 

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராக எதிர்த் தரப்பினர் போர்க்குரல் எழுப்பியதால், இன்று கூடிய தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு இருபது நிமிடத்தில் முடிந்தது.    

News image
Updated On :10 டிசம்பர் 2017, 8:07 am

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராக எதிர்த் தரப்பினர் போர்க்குரல் எழுப்பியதால், இன்று கூடிய தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு இருபது நிமிடத்தில் முடிந்தது.    

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இன்றுதான் முதன்முறையாக தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10.30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் துவங்கும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆஜரானார்கள். ஆனால் திட்டமிட்டதற்கு மாறாக நண்பகல் கூட்டம் 12 மணிக்குத்தான் துவங்கியது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில், தற்போதைய தலைவர் விஷாலுக்கு எதிராக அவரது எதிர்த் தரப்பினர் கோஷங்கள் எழுப்பினர். தயாரிப்பாளர் சங்க நலனுக்கு எதிராகவும், சட்ட விதிகளுக்கு புறம்பாகவும் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட முயற்சிகள் எடுத்தது தொடர்பாக அவர்கள் முதலில் கேள்விகளை எழுப்பினர்.

அத்துடன் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக வங்கி வைப்பு நிதியில் இருந்த ரூ.7 கோடி ரூபாய் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. தயாரிப்பாளர்கள் நலனுக்காக எதுவும் செய்ய இயலாவிட்டால் நீங்கள் ராஜிநாமா செய்துவிட்டு போய் விடுங்கள் என்றும் எதிர் அணியினர் தொடர்ந்து விஷாலை நோக்கி கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு அடுத்த பொதுக்குழுவில் உரிய விளக்கங்கள் அளிக்கப்படும் என்று விஷால் தரப்பு பதிலளித்தது

இதனைத் தொடர்ந்து மோதல் உருவாகுமோ என்று எழுந்த பதட்டமான சூழலின் காரணமாக அவசரமாக தேசிய கீதம் ஒளிபரப்பட்டு நிகழ்ச்சி ஒரு முடிவுக்கு வந்தது.

இதன் காரணமாக எந்த விதமான தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் வெறும் இருபது நிமிடங்களில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு ஒரு முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.