வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வமுடையவர் நடிகை நயன்தாரா. கோலிவுட்டில் மட்டுமின்றி டோலிவுட்டிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதன் காரணம் அவரது கதைத் தேர்வு எனலாம். தன்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம் அறம். இது பரவலான கவனம் பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

தமிழில் நயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்த படம் 'கோலமாவு கோகிலா'. இது முற்றிலும் வித்தியாசமான படம். முழுக்க நாயகியை மையமாக கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா புதிய படமொன்றில் நடிக்க உள்ளார்.
.jpg)
'சைத்தான்', சத்யா ஆகிய படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தியின் அடுத்த படம் கன்னட படமான யூ டர்னின் ரீமேக். சஸ்பென்ஸ் திரில்லர் இன வகையில் உருவான அந்தப் படம் சாண்டல்வுட்டில் சூப்பர் ஹிட்டானது.

பவன்குமார் இயக்கத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின் நிருபராக நடித்திருந்தார். வேலை விஷயமாக அவர் தேடிச் செல்லும் ஒவ்வொரு நபரும் மர்மமான முறையில் விபத்தில் அல்லது தற்கொலை செய்து கொண்டும் இறக்கிறார்கள். அதன் காரணத்தைத் கண்டுபிடிக்க முயற்சி செய்யும் ஷ்ரத்தாவுக்கு ஏற்படும் அதிர்ச்சியை நெகிழ்ச்சியான கதை சொல்லலின் மூலம் கூறியிருப்பார் இயக்குநர். தமிழில் சில மாற்றங்கள் செய்து, அதே கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.

நயன்தாரா இந்தப் படத்தை தானே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரபூர்வமாக இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. புதிய அவதாரத்தில், அடுத்த ஹிட்டுக்கு தயாராகிவிட்டார் நயன்தாரா என்கிறது கோலிவுட் வட்டாரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


