மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரஜினி பிறந்தநாள்: காலா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

ரஜினியின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு காலா படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2017, 4:59 am

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பான சூழலில் 2.0 படத்தையடுத்து பா. இரஞ்சித் இயக்கத்தில் காலா என்கிற படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது.

இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. கபாலி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ரஜினியின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு காலா படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.