டிசம்பர் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரசிகர்களைச் சந்திக்கவுள்ளார் ரஜினிகாந்த். இதுகுறித்து சென்னை காவல் ஆணையருக்குப் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களைச் சந்தித்து பேசிய ரஜினிகாந்த், அரசியல் களம் குறித்து பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். 'போர் வரும் போது அழைப்பு விடுக்கிறேன்' என்று அரசியல் களம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பேசியதால், ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில் கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை மீண்டும் சந்திக்கவுள்ளார் ரஜினி. வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ரசிகர்களுடனான சந்திப்பு நடைபெறுகிறது. தினமும் ஆயிரம் ரசிகர்களைச் சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த ரசிகர் சந்திப்புக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி சென்னைக் காவல் ஆணையருக்கு ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 68-வது பிறந்த நாளையொட்டி, அவரைப் பார்ப்பதற்காக, சென்னையில் அவரது வீடு அமைந்துள்ள போயஸ் தோட்ட பகுதியில் ஏராளமான ரசிகர்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனர். ஆனால், ரஜினிகாந்த் அதிகாலை 5 மணிக்கே வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதால் நீண்ட நேரம் காத்திருந்து அவரைப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பிறந்தநாளன்று ரசிகர்களைச் சந்திக்காத நிலையில் இந்தப் புதிய அறிவிப்பு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் கவனம் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் சந்திப்புக்குப் பிறகு அரசிய பிரவேசம் குறித்து ரஜினி அறிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

